சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு வாகனத்தில் இருந்த மூன்று குழந்தைகளைப் பார்த்து, இறங்கிச் சென்று சாக்லேட்டுகள் கொடுக்கிறார். அப்போது, அக்குழந்தைகளில் ஒரு சிறுமி, அந்தச் சாக்லேட்டை வாங்கப் பயந்து, “இதில் மயக்க மருந்து கலக்கவில்லைதானே? நீங்கள் என்னைக் கடத்திவிட மாட்டீர்களே?” என்று பயத்துடன் கேட்கிறாள்.



சிறு பருவத்திலேயே கடத்தல் குறித்த குழந்தையின் இந்த அப்பாவித்தனமான கேள்வி நெட்டிசன்களை உலுக்கியது. உடனே, அந்த நபர், “இல்லை, நான் அப்படிச் செய்ய மாட்டேன், நான் நல்லவன்” என்று பாசத்துடன் தெளிவுபடுத்திச் சாக்லேட்டைக் கொடுத்தார். சாக்லேட்டைப் பெற்ற பிறகும், அந்தச் சிறுமி தொடர்ந்து “தயவுசெய்து என்னைக் கடத்தாதீர்கள்” என்று பயத்துடன் கூறியது, சமூகத்தில் நிலவும் குழந்தைகள் மீதான பாதுகாப்புக் குறித்த கவலையை மீண்டும் பறைசாற்றுகிறது.