இந்தியாவில் தற்போது ஏழை எளிய மக்கள் அனைவரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஏராளமான திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ள நிலையில் மக்கள் தற்போது இந்த திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். அதன்படி அஞ்சல் நிலையங்களில் உள்ள பல திட்டங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

தபால் அலுவலக மாதாந்திர திட்டம்:

மாதாந்திர வருமானத்தை அளிக்கும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி முதலீட்டை தொடங்கலாம். இதில் தனிநபர் ஒன்பது லட்சம் கூட்டு கணக்கு என்றால் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:

இந்த திட்டத்தில் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் சேரலாம் எனவும் காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படும். மேலும் அதிகபட்சம் 30 லட்சம் வரை இந்த திட்டத்தில் சேமிக்க முடியும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

பெண் குழந்தைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் மற்ற திட்டங்களை விட உயர்வு. மாதந்தோறும் 250 ரூபாய் முதலீடு செய்து 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.

நிலையான வைப்பு நிதி:

இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படும் நிலையில் இதில் முதிர்வு காலத்தை நாமே தேர்வு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இளையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

மகிலா சம்மன் சேமிப்பு சான்றிதழ்:

பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டபோது இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடியும் நிலையில் அதிகபட்சமாக 20 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.