இந்தியாவில் மத்திய ஆயுத காவல் படை ஆட்சேர்ப்பில் சேரும் எல்லைப் பகுதி இளைஞர்களுக்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி எல்லை பகுதியாக இருக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் நிலையில் அரசின் சலுகைகளை பெற மேற்குவங்க இளைஞர்கள் போலி வசிப்பிடச் சான்றிதழ்களை காட்டி மத்திய ஆயுத காவல் படை பிரிவில் சேர்ந்துள்ளதாக புகார் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தற்போது வரை நான்கு இளைஞர்கள் போலி ஆவணங்களை காட்டி மத்திய ஆயுத காவல் படை பிரிவில் சேர்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலியான வசிப்பிடச் சான்றிதழை தயாரிப்பாரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.