குஜராத் லால்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் பாய். இவர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் குஜராத் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வந்த ஹேமந்த் பாய் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். காவல் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் தேர்வுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக இளம் வயதினர் மாரடைப்பாலும் இதய செயலிழப்பினாலும் உயிரிழப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.