இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியை இலக்கு வைத்து, மும்பையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரூ. 160.55 கோடி ரூபாய் அளவிற்கு மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரை வங்கி அமைப்பில் உள்ள வழிமுறைகளைத் துஷ்பிரயோகம் செய்து, போலி ஆவணங்கள் மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் கணக்குகள் மூலம் இந்த பிரம்மாண்டத் தொகையை அவர்கள் சுருட்டியுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியையே ஏமாற்றி இவ்வளவு பெரிய தொகையை ஒரு குடும்பம் மோசடி செய்திருப்பது, வங்கியியல் பாதுகாப்பு மற்றும் கடன் வழங்கள் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதனால் இந்த மாபெரும் கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கி, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி பெயர்களில் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்குக் கடன் வாங்குவது போலக் காட்டி, பெறப்பட்ட நிதியைத் தங்களுக்குள் இருந்த பல்வேறு துணைக் கணக்குகளுக்கு மாற்றி, இறுதியில் அந்தப் பணத்தைப் பினாமி சொத்துகளில் முதலீடு செய்ததும், வெளிநாடுகளுக்கு முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் யார் மற்றும் வங்கி அதிகாரிகளின் ஒத்தாசை இதில் உள்ளதா என்பது குறித்தும் அமலாக்கத்துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அரசு வங்கியின் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்து, அதிநவீன முறையில் நிதியைத் திசைதிருப்பிச் சென்றுள்ள இந்தச் சம்பவம், நிதியியல் குற்றங்களின் அபாயகரமான பரிமாணத்தை உணர்த்துகிறது.

நிதித்துறை குற்றவாளிகள் அதிநவீன தொழில்நுட்பங்களையும் சட்ட இடைவெளிகளையும் பயன்படுத்தி வங்கியியல் அமைப்புகளை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இந்த 160 கோடி ரூபாய் மோசடியே உதாரணம்.  அமலாக்கத்துறையின் இந்த அதிரடிச் சோதனைகள் மூலம் முறைகேடாகப் கைமாற்றப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டு வரும் நிலையில், பொதுத்துறை வங்கிகளின் பாதுகாப்பையும் தணிக்கை முறைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேசிய அளவில் வலுத்து வருகிறது.