பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான டி-மார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அசாத்தியமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் காரணமாக எப்போதும் மக்கள் கூட்டத்தால் அலைமோதி வருகிறது. இந்நிலையில், டி-மார்ட் கடைகளில் காலையிலேயே வாடிக்கையாளர்கள் படையெடுத்து வந்து மொய்க்கும் அளவிற்கு ஒரு புதிய ஆஃபர் விற்பனை தொடங்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அத்தியாவசிய மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வெறும் 29 ரூபாய்க்கு விற்கப்படுவதைக் கண்ட பொதுமக்கள், போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கிச் செல்வதால் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களின் மாத வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சேமிப்பைத் தரும் இடமாகத் திகழும் டி-மார்ட், அவ்வப்போது பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாட்களிலும் இத்தகைய மாபெரும் சலுகை விற்பனைகளை அறிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கண்ணாடி ஜாடிகள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் வெறும் 29 ரூபாய் என்ற அதிர்ச்சி தரும் குறைந்த விலையில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தகவலை அறிந்த மக்கள், கடை திறந்த சில நிமிடங்களிலேயே குவிந்து, தங்களுக்கு வேண்டிய பொருட்களைக் அள்ளிக்கொண்டு செல்கின்றனர்.

ஆன்லைன் மற்றும் பிற நவீன வணிகப் போட்டிகளுக்கு மத்தியிலும், மக்களுக்கு நேரடியாகக் குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் டி-மார்ட் நிறுவனம் மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

பணவீக்கமும் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கும் இந்தச் சூழலில், 29 ரூபாய்க்குப் பொருட்கள் கிடைப்பது என்பது சாமானியர்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆஃபர் பற்றிய செய்திகளும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வர, கடைகளில் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.