தமிழக அரசியலில் ‘ஆபரேஷன் மன்னார்குடி’ விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிடிவி தினகரனின் புகாருக்குத் தவெக தரப்பு  பதிலடி கொடுத்துள்ளது.

“எங்க எம்.எல்.ஏ காமராஜைக் காணோம், தவெக கொடுத்த லெட்டர் போலியானது” என ஆளுநரிடம் தினகரன் கதறிய சில மணி நேரங்களிலேயே, மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் மிக உற்சாகமாகத் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கையெழுத்திடும் ‘ வீடியோ ஆதாரத்தை விஜய் தரப்பு அதிரடியாக வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “யாரும் யாரையும் கடத்தவில்லை, மனப்பூர்வமாகவே ஆதரவு தருகிறேன்” என அந்த வீடியோ டிடிவி தினகரனுக்குப் பலமான நெத்தியடியைக் கொடுத்துள்ளது. 118 என்ற மேஜிக் நம்பரைத் தொடத் துடித்த விஜய்க்கு, காமராஜின் இந்த அதிகாரப்பூர்வ கையெழுத்து கோட்டைக்கான வாசலைத் திறந்துவிட்டதோடு, தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பை நிலைகுலைய வைத்துள்ளது.

“>