தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடையச் சில இடங்கள் குறைவாக இருந்தது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) ஆகிய இடதுசாரி கட்சிகள் தவெக-விற்குத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இடதுசாரிகளின் ஆதரவும் கிடைத்துள்ளதால் விஜய்யின் பலம் 117-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் ஒரே ஒரு இடத்தின் ஆதரவு கிடைத்தால் அரியணை ஏறுவது உறுதியாகிவிடும். இந்தச் சூழலில், விசிக-வின் ஆதரவும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால், விஜய் தமிழகத்தின் அடுத்த முதல்வராகப் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 30 ஆண்டுகாலத் திரைப்பயணம் மற்றும் அரசியல் போராட்டத்திற்குப் பிறகு, விஜய் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டத் தயாராகி வருவது தமிழக அரசியலில் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.