ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முரளி கிராம அஞ்சலகத்தில் பெண் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் ஷமிமா என்பவருக்கு, சேமிப்பு கணக்கு வைத்திருந்த ஜோதிடர் ஷண்முகம் (63) தொந்தரவு ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

ஷண்முகம், தொலைபேசியில் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்ததால், ஷமிமா அவரைத் தனது மொபைலில் பிளாக் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷண்முகம், ஷமிமாவின் நடத்தையை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை எழுதி, உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஷமிமா போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, அவதூறு மற்றும் தொந்தரவு செய்ததாக ஜோதிடர் ஷண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் அரசு ஊழியர்களுக்கு எதிரான இத்தகைய தொந்தரவுகள் குறித்து பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.