தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் கேவிஎன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் இன்று வெளியாவதாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது மத நல்லிணக்கத்தை புண்படுத்தும் விதத்தில் காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி மறு ஆய்வுக்கு சென்சார் போர்டு அனுப்பி உள்ளதாகவும் அதனால் சான்றிதழ் வழங்காததாகவும் கூறப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. மேலும் அதன்படி படத்தை மறு ஆய்வு அனுப்பிய சென்சார் போர்டு உத்தரவை ரத்து செய்த நீதிபதி உடனடியாக ஜனநாயகன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
