தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் காமெடி கதாநாயகன் சூரி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முதன்மை வேடத்தில் நடிக்கும் இடையில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர் சூரியும் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நேற்று படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் தற்போது விடுதலை 2 படத்தின் டிரைலர் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இதில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியர் இடையேயான காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது.