
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் பாசிட்டிவ்வான விமர்சனம் தான் பெறப்பட்டு வருகிறது
இந்த படத்தில் Sawafeeka பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. சமீபத்தில் கூட 3 பாட்டிகள் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலானது. அந்த வகையில் தற்போது தியேட்டரில் வைத்து ஒரு தாத்தா இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் லைகா நிறுவனம் அதனை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ,
When the beats hit right, age is just a number! 🔥 #Sawadeeka fever has everyone grooving! 🕺#Vidaamuyarchi #VidaamuyarchiInCinemasNow https://t.co/ZLmoRGpu8J
— Lyca Productions (@LycaProductions) February 7, 2025