தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி நடிகை திரிஷா ரம்யா என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்திலும் நடிகை திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Welcome to the world of GBU Maamey @trishtrashers mam as Ramya 💥 See you all on April 10 th ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 #GoodBadUgly pic.twitter.com/43dnjv9fNG
— Adhik Ravichandran (@Adhikravi) February 22, 2025
