லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சினிமாவில் நடிகர் ஜூனியர் என்டிஆர்-ஐ வைத்து படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் புகழின் உச்சத்திற்கு சென்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு கைதி2, விக்ரம் 2 படங்களை இயக்க இருக்கிறார்.

அடுத்தடுத்து நிறைய படங்களை இயக்கும் வேலைகளிலும் பிசியாக இருக்கும் இவர் தற்போது இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் 2  படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சினிமாவில் படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம் .அதில் நடிகர் ஜூனியர் என்டிஆர்-ஐ வைத்து படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.