தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் மற்றும் விஜய் இணையும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், கேஜிஎஃப் வில்லன் சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் டில்லி கதாபாத்திரம் இடம் பெறும் என்று ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் கார்த்தியை வைத்து லோகேஷ் இய்க்கிய கைதி திரைப்படத்தில் கார்த்தி டில்லி என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் அந்த கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் இடம்பெறும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.