
இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வே பயணிகள், இப்போது 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இந்த மாற்றம் ரயில்வே கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இந்த மாற்றத்தால் எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டாது. மேலும், தாஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு காலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.