ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ரிலீசான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அமரன் திரைப்படத்தில் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை கூறியுள்ளனர். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. அமரன் திரைப்படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியதாவது, மதிப்பிற்குரிய பாதுகாப்பு அமைச்சர் சிங்கை இன்று சந்தித்ததில் பெருமை அடைகிறோம். அமரன் படத்தின் வெற்றிக்கு பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேஜர் முகுந்து வரதராஜன் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் இந்த சந்திப்பு தேசபக்தியை மிகவும் ஆழமாக பிரதிபலிக்கும் உணர்வுடன் நமது நாட்டு வீரர்களுக்காக அர்ப்பணிப்புடன் படம் எடுத்த படக்குழுவை பாராட்டும் விதமாக அமைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.