பொறியியல் படிப்புக்கான செயற்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி அதாவது இன்று முதல் தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கை ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணைய வழியில் இன்று தொடங்குகிறது. அதில் முதல் கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.