இந்தியாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அனைவரும் பொறியியல் துறையை நோக்கி ஓடினர். அதனால் எங்கு பார்த்தாலும் பொரியல் கல்லூரிகள் மற்றும் அதிக இளைஞர்கள் பொறியியல் பட்டதாரிகள் என மாறி இருந்தது. இருந்தாலும் பொறியியல் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நாளடைவில் குறைய தொடங்கியது. இதற்கு முன்னதாக கல்லூரிகள் படிக்கும்போதே மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் வளர்ந்து வரும் நவீன காலத்தில் வெறும் பட்டப் படிப்பை மட்டும் வைத்து வேலை வாங்க முடியாது என்று ஐடி நிறுவனங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அதனால் இதற்காக கூடுதல் கோர்ஸ் படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக கல்லூரி நிர்வாகம் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமுள்ளது. இதற்கு முன்னோடியாக அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பின் மாணவர்கள் தங்களது ஆறாவது மற்றும் ஏழாவது செமஸ்டரில் Artificial Intelligence (AI), Internet of Things (IOT), Machine Learning (ML), Data Science, Full Stack Development, cloud computing, Cyber Security ஆகிய பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடங்கள் தொழில் நிபுணர்கள் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இவர்களுக்கான தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைப்பது எளிதாகிவிடும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.