தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று  வெளியிட்டுள்ளார். இதனை www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தரவரிசை பட்டியலை அறிந்து கொள்ளலாம். 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள தரவரிசை பட்டியல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என உயர்கல்வித்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.