கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக மொத்தம் 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அதில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே ஸ்டாலின் அரசு நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது மொத்தத்தில் வெறும் 13 சதவீதம் தான் என்றும், ஆனால் முதல்வர் ஸ்டாலின் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் பேசி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் திமுக அரசுக்கு எதிராகவே உள்ளனர். வரும் தேர்தலில் அவர்கள் அனைவரும் திமுகவைத் தோற்கடித்து, தங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தருவார்கள் என அன்புமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.