இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பலரும் இன்று வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில், அங்கு போதிய கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அங்குள்ள பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்துவதற்கு ரூ.200 வரை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அனுமதி சீட்டு பெறவும் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.