தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 ஆம் தேதி அன்று பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், பொதுத்தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் தேர்வு எழுத வருகை புரியும் மாணவர்களின் விபரம் மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பொதுத் தேர்வில் மாற்று திறனாளிகளுக்கான சலுகையை பெற்றவர்களின் விபரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் www.dge1.tn.gov.in என்ற தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் தேர்வு கண்காணிப்பாளர்கள் பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.