காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி வேலைவாய்ப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் “பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பெருமையாக இருந்தது. எனினும் தற்போது மத்திய அரசுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியமல்ல.

வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக போலியாக வாக்குறுதி அளித்தவர்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு பதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகளை குறைத்து உள்ளனர். கடந்த 2014-ம் வருடம் 16.90 லட்சமாக இருந்த பொதுத்துறை வேலைகள் 2022-ம் ஆண்டு 14.60 லட்சமாக குறைந்து உள்ளது. வளர்ந்து வரக்கூடிய நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறையுமா? தொழில் அதிபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து அரசு வேலைகள் நீக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.