இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நண் பகல் வேளையில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வட இந்தியாவில் நிலவி வரும் வெப்ப அலையால் சென்ற 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்து உள்ளனர். அதாவது, உத்தரபிரதேசத்தில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் என மொத்தம் 98 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையில் வெப்ப அலையானது தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பலி எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் எனும் அச்சம் நிலவி வருகிறது.