கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பிலும் இறுதி வாதங்களை முன்வைக்க ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து, இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.