
பொங்கலை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடங்கி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பினை மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தொகுப்பில் பாசிப்பருப்பு, பச்சரிசி, நெய், உலர் திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் என ஏழு பொருட்கள் அடங்கும். இந்த தொகுப்பு 199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.