இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். நாள் முழுவதும் இணையத்தளங்களிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதற்கிடையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது பலரும் மோசடி செய்து வருகிறார்கள். லிங்குகளை கிளிக் செய்ய சொல்லி பணத்தை திருடுகிறார்கள். இந்நிலையில் பேஸ்புக்கில் உள்ள எந்த லிங்குகளையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொருட்களை வாங்குவதற்கு அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பேஸ்புக், Whatsapp மூலம் அனுப்பப்படும் லிங்குகள், செயலிகள், கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர். சைபர் மோசடிக்கு ஆளாகியிருந்தால் ‘1930’ என்ற எண்ணில் புகார் அளிக்குமாறும் கூறியுள்ளனர்.