
தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நிரவல் காரணமாக கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு பணி மாறுதல் செய்யப்பட்டனர். அதன் பிறகு மீண்டும் பணி மாறுதல் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசின் சார்பில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்திய தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்குள் பேராசிரியர்களாக இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.