செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்லா இடத்திலும் காங்கிரஸ்  தோத்துட்டு, சில மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்வது எங்களுடைய பிரச்சனையா ? இன்னைக்கு காங்கிரசின் தலைமையில் ஒரு கூட்டணி என்று சொல்லும்போது ? காங்கிரஸ் எத்தனை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கு.  அதிலும் ராஜஸ்தானை இழக்க போகிறது,  சத்தீஸ்கரை இழக்க போகிறது.  அதனால் ஒவ்வொரு மாநிலமாக இழந்துவிட்டு, அங்கு இருக்கக்கூடிய குடும்ப கட்சிகளை எல்லாம் இணைத்துக் கொண்டு ….

குடும்பத்தை வைத்து அரசியல் செய்வோர்களை எல்லாம் இணைத்துக்   கொண்டு வருகின்றார்கள். பிஜேபி ஒரு வலிமையான கட்சி. ஏன் அப்படின்னா….  மக்கள் பிஜேபியை ஏற்றுக் கொண்டு  இந்தியா முழுவதுமே ஆட்சி, அதிகாரத்தை கொடுத்திருக்காங்க. இந்தியாவுல பிஜேபி ஆட்சியில் இருக்கு. நிறைய மாநிலத்தில் ஆட்சியில் இருக்கு….

இன்னைக்கு அதிகமான மாநிலத்தில் காங்கிரசை விட இரண்டு – மூன்று மடங்கு பிஜேபி ஆட்சியில் இருக்கு. அப்படி இருக்கும்போது,  இங்கே   பிஜேபி மட்டும் இருக்கின்றது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ?  பிஜேபி ஒவ்வொரு இடமாக மக்களுடைய அன்பை பெற்று ஆட்சிக்கு வருகின்றது. அதேபோல பிரதமர் சொல்வது போல ? NDA கூட்டணியில் பெரிய கட்சி,  சிறிய கட்சி என்று இல்லை. அனைவரும் NDA- வின்  உறுப்பினர்கள், NDA-வை வலிமைப்படுத்த வந்திருப்பவர்கள். அதனால் நம்முடைய கட்சியில் இந்தியாவில காஷ்மீரில் இருந்து எல்லா பகுதியில் இருந்தும் நம்முடைய தலைவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

NDA-வை பொறுத்தவரை முழுமையாக பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக்கொண்டு இந்த கூட்டணியில் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த கூட்டணியில் எத்தனை பேர் காங்கிரஸை எடுத்துக் கொண்டு உள்ளார்கள் ? இன்றைக்கு காங்கிரஸ் இது போன்ற குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்றால் ? காங்கிரஸ் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள்  யாரு கூட்டணி தலைர் ? என்றே நமக்கு தெரியாது.

நிதிஷ்குமார் அவர்கள் தலைவர்களா ?  இல்ல மம்தா பானர்ஜி அவர்கள் தலைவர் ? அல்ல காங்கிரஸ் தலைவரா ? யார் தலைவர் என்றே தெரியாத கூட்டணி. அவங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் ?  எங்களுடையது நரேந்திர மோடி அவர்கள்…. மூன்றாவது முறை வருவார். அங்கே யாரு ?  எப்படி நீங்க சீட்டை பிரிக்க போறீங்க ? யார் எந்த இடத்தில் நிற்பாங்க ?   ஒரு இடத்துல இன்னொரு கட்சி இருக்குன்னா….  நீங்க இடத்தை விட்டுக் கொடுக்கப் போகிறீர்களா ? உங்கள் கட்சியில் ஏகப்பட்ட தொண்டர்களை நீங்களே குத்தி கொன்று இருக்கீங்க...

உதாரணத்திற்கு மேற்குவங்கத்தில் காங்கிரஸ் – மம்தா பானர்ஜி. அந்த தொண்டர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல போறீங்க ?  அடிப்படையிலேயே ஒற்றுமை இல்லாமல்…  முற்றிலும் முரண்பாடாக இருக்கக்கூடிய கூட்டணிக்கு ”இந்தியா” என்கின்ற பெயரை வச்சாங்கன்னா….  ஏற்கனவே சொல்லி இருக்கேன்,  இது வந்து ஏதோ ஒரு மிருகம் தன் மேல கோடு போட்டுட்டு…  நானும் புலி என்று சொல்வது போல் இருக்கிறது என தெரிவித்தார்.