காரைக்காலில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த 55 வயதுடைய முகமது இப்ராஹிம் சுல்தான் என்பவர் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முகமது இப்ராஹிம்மை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த காரைக்கால் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் முகமது இப்ராஹிமுக்கு 10 ஆண்டுகள் ஜெயிலில் தண்டணை விதித்து உத்தரவு பிறப்பித்தது.