ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் மற்றும் ஜே இ இ ஆகிய போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதில் 4.27 கோடி செலவினத்தை தவிர்த்து இருக்கலாம் என்றும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா 55 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.