சென்னை சோழவரத்தை அடுத்த புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன்  மற்றும் சண்டே சதீஷ் ஆகியோரின் உடல்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன வைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் காந்தி நகரை சேர்ந்த பிரபல ரவுடி கூலிப்படை தலைவருமான முத்து சரவணன். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரின் கூட்டாளி சாண்டே சதிஷ் மீதும் கொலை முயற்சி, பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அண்மையில் அதிமுக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கிலும்,மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கிலும் முத்து சரவணன் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார். இந்த நிலையில் சோழவரம் பூதூர் அடுத்த மாரம்பேடு பகுதியில் குற்றவாளி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஓரத்தில் உள்ள ஒரு பாலடைந்த வீட்டில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடை த்தது. இந்த தகவலில் பெயரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர் தலைமையிலான போலீசார் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முத்து  சரவணன்,  சண்டே சதீஷ் ஆகியோர் காவலர்கள் நோக்கி சுடத் தொடங்கினர்.

இதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து தப்பிக்க முயன்ற  இருவர் மீதும் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். ரவுடி முத்து சரவணன், சண்டே சதிஷ் சடலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.