கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புது குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார். இந்த சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக அவருடைய தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பரிதவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி கடலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.