தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இது தொடர்பாக தொடக்க கல்வித்துறை இயக்குனர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை  மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் படிக்கும் 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடுத்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு அந்த தகவல்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.