மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 9  குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் ‘கோல்ட் ரிப்’ (Coldref’) மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ டிஎஸ்'(Nextro syrup) எனும் இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தது தெரியவந்தது. இந்த மருந்துகளில் பாதகமான ரசாயன வேதிப்பொருள் கலந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ‘கோல்ட் ரிப் (Coldref’) மருந்தின் விநியோகம் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குழந்தைகளின் மரணம் தொடர்பாக மேல்  விசாரணை நடைபெற்று வருவதுடன், மருந்தின் தரம் குறித்தும் விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சம்பவம் பெற்றோர்களும் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.