பிரபலமான பிராண்ட் தயாரிப்பு என்ற பெயரில் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள், நம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக மாறக்கூடும் என்பதை உணர்த்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் மிகவும் விரும்பி பருகும் ‘புரூட்டி’ (Frooti) ஜூஸின் 10 ரூபாய் பாக்கெட்டை பெண் ஒருவர் கட் செய்து ஒரு பாத்திரத்தில் ஊற்றும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

அப்போது, மாம்பழ ஜூஸ் நிறத்திற்குப் பதிலாக, பார்ப்பதற்கே அருவருப்பான சாக்கடைத் தண்ணீர் போன்ற அடர் கருப்பு நிறத்தில் திரவம் வெளிவருவதைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைகிறார். ​பிராண்ட் பெயர்களை கண்மூடித்தனமாக நம்பி, நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எதை வாங்கிக் கொடுக்கிறோம் என்ற பலத்த கேள்வியையும், விழிப்புணர்வையும் இந்த வீடியோ மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

“பிராண்ட் என்ற பெயரில் நாம் வாங்கும் பொருட்கள் நம் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்றும், “உங்கள் குழந்தைகளும் இந்த விஷத்தைக் குடிக்கிறார்களா?” என்றும் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து எச்சரித்து வருகின்றனர். பாக்கெட் ஜூஸ்கள் வாங்கும் போது பெற்றோர்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மிக அழுத்தமாக உணர்த்தியுள்ளது.