தலைநகர் லிமாவில் பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலக கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே இந்த போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் தினந்தோறும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. இந்நிலையில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் வெடித்தது. மேலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.