காரில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஒன்றில் இறந்த பெண் உருவம் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பையனூர் பகுதியில் ஆதித்யன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல்  கார் ஓட்டிச் சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து காரின் உரிமையாளரான பிரதீப் என்பவருக்கு, ஏ.ஐ. கேமராவில் பதிந்த புகைப்படத்துடன் அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் காரில் இல்லாத ஒரு பெண்ணின் உருவம் காரில் இருந்தது. அதாவது, ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருவம் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.