மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிஷான் கடன் அட்டை திட்டம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கு முதலில் அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளை அணுக வேண்டும். அவர்கள் உங்களின் பொருளாதாரத்தை பொறுத்து, தகுதியுடைய விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் வழங்குவார்கள்.

இதில் கிசான் அட்டை வாங்கியவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம் பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த கணக்கின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும்.