மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவர், பந்து கழுத்தில் தாக்கியதன் காரணமாக உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளது.
பென் ஆஸ்டின் என்ற அந்த இளைஞர், அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5 மணியளவில், மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலி டவ் ரிசர்வ் மைதானத்தில் வலைப் பயிற்சியில் (Nets) ஈடுபட்டிருந்தார். அப்போது, பந்து கழுத்தில் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவசரகால மருத்துவக் குழுவினர், அவருக்கு உயர்தர சிகிச்சைகளை அளித்தனர். பின்னர், ஆஸ்டின் மிகவும் ஆபத்தான நிலையில், சாலை ஆம்புலன்ஸ் மூலம் கிளேட்டனில் உள்ள மோனாஷ் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி காலை அவர் உயிரிழந்ததாக ஃபெர்ன்ட்ரீ குல்லி கிரிக்கெட் கிளப் வேதனையுடன் அறிவித்துள்ளது.
