நேபாளத்தில் தீவிரமடைந்த மக்கள் போராட்டங்கள் ஆட்சியை சீர்குலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாள நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேல் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அமைச்சரை 20-க்கும் மேற்பட்ட பேர் வீதியில் விரட்டி சென்றதாகவும், சிலர் அவரை உதைத்தும், சிலர் கையால் தாக்கியும் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. தனது உயிர் காப்பாற்ற அமைச்சர் ஓடிச் சென்ற பரிதாபமான காட்சிகள் மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்த ஒரு நாளுக்குள் இந்த சம்பவம் நடைபெறியுள்ளது. சமூக வலைதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை கடந்த வாரம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நேரடியாக மந்திரிமாரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு நிலைமை எரிவூட்டப்பட்டுள்ளது.