பெருங்களத்தூர் சாலையில் திரிந்த முதலையை வனத்துறையினர் பிடித்து பூங்காவில் அடைத்தனர்.
சென்னை பெருமழையின் போது, முதலை ஒன்று பெருங்களத்தூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையை கடந்து சென்றது. பெருங்களத்தூரை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் முதலை ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் வலைவிரித்து முதலையை பிடித்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். முதலை சாலையில் வந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.