மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுருக்கு ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 வட்டங்களில் நிவாரண தொகை வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும்
மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்டோர்களுக்கு வெள்ள நிவாரணம் தரப்படும். நியாய விலை கடைகள் மூலமாக ரூபாய் 6000 நிவாரண தொலைக்கான டோக்கன் வழங்கப்படும்..
பாதிக்கப்பட்டவர்கள் ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை இழந்திருக்க வாய்ப்புள்ளதால் ரொக்கமாக தரப்படுகிறது. புயலால் வாழ்வாதாரம் பாதித்த 2 நாளுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்த பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துவோர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்.
பொருட்கள் இழப்பு உள்ளிட்ட விவரங்களுடன் வங்கி கணக்கு எண்ணுடன் ரேஷன் கடையில் விண்ணப்பிக்கலாம்.