இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவிடுகிறது. அந்த வகையில் எலி என்பது மனிதர்களைப் பார்த்தால் பல நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடி ஒளிந்து கொள்ளும். ஆனால் அப்படியான எலி ஒன்று தற்போது கோழியிடம் சேட்டை செய்து உதை வாங்கிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

இது குறித்த வீடியோவில் கோழி அமைதியாக தான் முதலில் செல்கிறது. ஆனால் குசும்பு பிடித்த எலி அந்த கோழியிடம் சென்று வேண்டுமென்றே வம்பு செய்ய அதற்கு கோபம் வந்துவிடுகிறது. அதன் பிறகு கோழி எலியை துரத்தி துரத்தி கொத்த தொடங்குகிறது. மாட்டிக்கொண்ட எலி எப்படியாவது தப்பிக்கலாம் என்று முயற்சித்தும் முடியவில்லை. ஆனால் கடி வாங்கிய கோழி கொத்த வில்லை. அந்த கோழிக்கு ஆதரவாக இன்னொரு கோழியும் வந்து அந்த எலியை கொத்தி உள்ளது . இதனால் எலி மயக்கம் வந்ததுபோல் நடித்து தப்பித்து விடுகிறது. இந்த கியூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.