சென்னைவிமான நிலையத்தில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,தெலுங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நடத்த முடியவில்லை. சமூக நீதி என்பது என்ன. பின் தங்கிய அனைத்து சமுதாயத்தினரும் முன்னேறிய சமூகங்களுக்கு இணையாக முன்னேற வேண்டும் என்பதுதான்.
இத்தனை காலம் இட ஒதுக்கீடு பெற்ற சமுதாயங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முதல்வருக்கு மனம் இல்லையா.? அப்படியெனில் சமூக நீதிப் பேச முதலமைச்சருக்கு தகுதி இல்லை என்று தான் அர்த்தம். மேலும் நாங்கள் பெரியாரின் வாரிசுகள் என்று வசனம் பேசினால் மட்டும் போதாது என்று கூறினார்.
