தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது அக்காள் மகள் கனகசுதா. இந்நிலையில் முத்துலட்சுமிக்கும், கனகசுதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் கனகசுதா அவரது சகோதரர் தனபால் ஆகியோர் முத்துலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முத்துலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கனகசுதா, தனபாலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.