பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க முடியும்.
மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 7% வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைக்கு 10 வயது பூர்த்தி அடையும் முன்பாக இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 நீங்கள் செலுத்தி வர வேண்டும். மகளின் 21 வயதில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.63,79,634. இதில் நீங்கள் முதலீடு செய்த ரூ.22,50,000 போக, எஞ்சியுள்ள ரூ.41,29,634 லாபமாக கிடைக்கும்
