தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாமை தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கிய நிலையில், சென்னை மாநகராட்சியில் முதல் நாள் முடிவில் 56,542 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், “பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம்.

மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் கொண்ட இலட்சியத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தேர்தல் அறிக்கையில் சொன்னோம். அதன்படி தருமபுரியிலிருந்து தொடங்கி விட்டோம் என தெரிவித்துள்ளார்.