பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த மையத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுடைய மற்றும் அனுபவம் உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் மாத ஓய்வூதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்குப் பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்குள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்ற ஒரு வருடம் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். பன்முக உதவியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் முன் அனுபவம் கொண்ட உள்ளுறை சார்ந்த பெண்களாகவும் நன்கு சமைக்க தெரிந்தவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் மாத ஓய்வூதியம் 6400 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.